2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காரியாலயத்தை திறந்துவைத்தார் பிள்ளையான்

Princiya Dixci   / 2020 நவம்பர் 11 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரியாலயத்தை, மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக இன்று (12)  திறந்துவைத்தார்.

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்பகப்பட்டுவரும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்  இணைத் தலைவராக ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, நேற்று நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, இன்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருக்காக காரியாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X