2025 மே 07, புதன்கிழமை

காரியாலயம் அங்குரார்ப்பணம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் காரியாலயம், கல்லாறு பிரதான வீதியில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அதிதியாகக் கலந்துகொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்தார்.

அத்தோடு, கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் , கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மக்களின் தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன், இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X