Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 10:43 - 1 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டம் பண்புகளைக் கொண்டதாகக் காணப்பட்ட போதிலும் காலத்தின் மாற்றம் காரணமாக, கூட்டுக் குடும்பங்களில் இருந்த பெரியோர்களை, வயோதிப மடங்களில் சேர்க்கப்படும் நிலையைப் பார்க்கின்றோம் என, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச கலாசார விழா மயிலம்பாவெளி கருணாலயம் மண்டபத்தில் நேற்று முன்தினம் (04) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தொடரந்து உரையாற்றுகையில்,
“பிரதேசத்தில் இருக்கின்ற கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் பேணிப்பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, அவை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
“தமிழனுடைய கலையும் காலாசாரமும் என்றும் வாழும் என்பதற்கு கலாசார நிகழ்வுகள் அவசியமாக உள்ளன.
“நாடகங்கள் என்பது வெறுமனே மேடைகளில் உருவாக்குவது மட்டுமல்ல. ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி ஒரு மனிதனின் உளவள அபிவிருத்தியில் தங்கியுள்ளது. இதனூடாக, ஏனைய பிரதேசத்தின் கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் பாரிய மாற்றம் ஏற்படும்.
“அதுபோன்று, காலாசாரம் என்பது மனிதனை உளவளபப்டுத்தி, அவனுடைய மனதைச் சரியான வழியில் கொண்டு சென்று, ஏனைய இளைஞர்களை வழிப்படுத்தும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது.
“மாவட்டத்தில் பல்லின இனக் குழுக்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. அதிலம் குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேசம் தொடர்தேர்ச்சியாக நல்ல அடைவைக் கொண்டுள்ளது.
“எமது மக்கள் இடம்பெயர்ந்து மேற்கத்தேய நாடுகளில் கூடுதலாக வாழ்கின்றார்கள். அவர்கள், மொழி காலாசாரத்தை வளர்ப்பதற்கு பாரிய பங்காகற்றுகிறார்கள். அவர்கள் தொலைத்த மொழிவளத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
மகாதேவா Saturday, 09 December 2017 04:44 AM
'குழைவு“ என்றால் ஒன்றுகலத்தில் அல்லது திரவப்பதமாதல் என்றுதான் பொருள்! “சீர்குழைவு” என்று தலையங்கமிட்டுள்ளீர்கள்.... இதன் அர்த்தம்தான் என்ன? தயவுசெய்து தமிழைக் கொலை செய்யாதீர்கள்!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago