2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில், தூக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவர், அவர்களது தந்தையால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 10, 07 வயதுகளையுடைய  இரு குழந்தைகளின் சடலங்களைப் பொலிஸார் கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

அஷீமுல் ஹக் (வயது 10) என்ற ஆண் குழந்தையும் ‪ அஷீமுல்  ஷாஹியா (வயது 07) எனும் பெண் குழந்தையுமே சடங்களாக மீட்கப்பட்டு, பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை, மாவடிச்சேனையைச் சேர்ந்த 40 வயதான முஹம்மது லெப்பை சுலைமாலெப்பை எனும் அக்குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவி, ஏழு வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் கோளாறு காரணமாக மரணித்ததைத் தொடர்ந்து அக்குழந்தைகளை தந்தையே பராமரித்து வந்துள்ளாரெனவும் இந்நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X