2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘கிராம வளங்களைக் கொண்டு முன்​னேறுவோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி  

கிராமத்தினதும், அங்குள்ள மக்களினதும் வளர்சிசிக்காக கிராமத்திலுள்ள வளங்களை வைத்துக் கொண்டு முயற்சிகளை எடுக்கவேண்டுமென, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

போரதீவுப்பற்று, ஒல்லிமடுவால் கிராமத்தின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக அக்கிராமத்துக்கு இன்று (30) விஜயம் செய்து, அம்மக்களிடம் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், கிராம மட்டத்தில் காணப்படுகின்ற சிறு, சிறு தேவைகளை கிராமதிலுள்ள இளைஞர், யுவதிகள், பெரியோர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து சிரமதானங்கள் மூலமும், பொது நிகழ்வுகள் மூலமும், அவற்றைச் செய்து முடிக்கலாமென்றார்.

இப்பகுதி மக்கள், கிராமங்களை முன்னேற்றுவதற்கு ஓரளவு முயற்சியுடன் செயற்படுகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானவர்களுக்குத்தான் நாமும் உதவி செய்யவேண்டுமென நினைத்து அரச சார்பற்ற அமைப்புகளும் தாமாகவே உதவி செய்வதற்கு முன்வருவார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், கிராமதிலுள்ள மக்கள் அனைவரும், கிராமத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்த அவர், ஏனைய உதவி வழங்குனர்களை உங்களுடன் இணைத்து விடுவதங்குத் தாம் பின்னிற்கமாட்டோம், என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X