Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் கிராமிய பெண்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, நாளை (14) மாலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு காவியா நிறுவனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
“கிராமியப் பெண்களின் பொருளாதாரத்துக்குக் கை கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தப்படும் இக்கண்காட்சி, நாளை மாலை ஆரம்பமாகி, 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மசாஜா, இதனை ஆரம்பித்து வைப்பதுடன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறுதொழில் முயற்சியாளர்களின் வியாபார சந்தையை வலுப்படுத்தும் முகமாகவும் கிராமிய பெண்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வகையிலும் காவியா நிறுவனம் இதனை நடத்துவதாக, காவியா நிறுவனத்தின் தலைவி திருமதி யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
52 minute ago
56 minute ago