Freelancer / 2023 மார்ச் 23 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மகனின் கிரிக்கெட் மட்டடையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டடைப் பதிவு செய்த அவர், தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி, கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
18ஆம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21ஆம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம், காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளரான 65 வயதுடைய கடுசப்பிள்னை கருணாகரன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
இதனையடுத்து காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேற்று (22) மாலை நேரடியாகச் சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், போதனா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ள சடலத்தையும் நீதவான் பார்வையிட்டு, பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
அவரது பிரேத பரிசோதனை இன்று (23) இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.அப்துர் றஹீம் தெரிவித்தார். (N)
49 minute ago
51 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
20 Nov 2025