Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 18,001 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று, தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட தலைமையக உத்தியோகத்தருமான எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.
இதில், மட்டக்களப்பு மாவட்டத்தில், 7,216 மாற்றுத்திறனாளிகள் இருப்பதுடன், அவர்களில் சுமார் 1,000 பேர், போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் செயலமர்வு, மட்டக்களப்பு கெமிட் நிறுவன ஒன்றுகூடல் மண்டபத்தில், சனிக்கிழமை (22) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், சக்கரநாற்காலிகளுக்கும் ஊண்டுகோளுகளுக்குள்ளும் முடங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொணரவும் அவர்களின் பலத்தை உலகறியச் செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இந்த தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தேசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் பங்கு பற்றிய மாற்றுத்திறனாளிகள் 23 பேர் பதக்கங்களைப் பெற்றதுடன், மூன்று தங்கப்பதக்கங்களையும் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago