2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கில் அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம் றனீஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.எம். ஹனீபா

உடன் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வகையான பிரத்தியேக வகுப்புகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலான அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டும் கந்தளாய் மற்றும் தெஹியத்தகண்டிய போன்ற கல்வி வலயங்களில் சில மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

மாணவர்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X