Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 மே 08 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெசாக் பண்டிகையை அமைதியான முறையில் பௌத்த மக்களுடன் இணைந்து தமிழ், முஸ்லிம் மக்களும் கொண்டா டியதாக அங்குள்ள செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தத்தமது வீடுகளிலும் சொந்த இடங்களிலும் வெசாக் பண்டிகையைக் கொண்டாடி வருவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்கள் படை முகாம்கள் அரச அலுவலகங்களிலும் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடிகளா லும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இம்முறை காத்தான்குடி நகரிலும் முஸ்லிம் மக்கள் வெசாக் கூடுகளை ஏற்றியுள்ளதுடன் பௌத்த கொடிகளையும் தொங்கவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
அன்னதான நிலையங்கள் தாகநாந்தி நிலையங்கள் எதுவும் இம்முறை அமைக்கப்படவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago