Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 14 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றனவென, பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இவை நேற்றைய தினமும் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா.அசோக் என்னும் வேட்பாளரின் அலுவலகம் மீதே, இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ எம்.பி எஸ்.வியாழேந்திரன், குறித்த தாக்குதல் சம்பவத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், தோல்வி பயத்தில் இருப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஏறாவூர் - மீராகேணி பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.எஸ். முறீஸ் என்ற வேட்பாளரது வீட்டின் மீது, நேற்று (13) கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் வேட்பாளரின் வீட்டுக் கதவு, யன்னல் ஆகியன சேதமடைந்துள்ளதாக, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
மேலும், மண்முனைப் பற்று பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது, கடந்த வியாழக்கிழமை (11) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி 2ம் வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாமித்தம்பி சிவசுந்தரம் எனும் வேட்பாளரின் வீட்டின் மீதே, இந்த பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இது பெற்றோலைக் கொண்டு, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பெற்றோல்குண்டு என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கிண்ணியா நகர சபையில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ரஹ்மானியா நகர் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயத்திலுள்ள பெனார், நேற்று (13) அதிகாலை இனந்தெரியாதோரால் களவாடப்பட்டுள்ளதாக, கிண்ணியா பொலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், குறித்த பகுதிகளுக்குப் பொறுப்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago