Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.அஹமட் அனாம், கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார், எப்.முபாரக்
தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மாத்திரம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றன.
உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தமையைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஹர்த்தால், கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்பட்டது.
தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும், தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோறளைப்பற்று பிரதேச மக்களால், இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

22 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
1 hours ago