Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
கனகராசா சரவணன் / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பக்கச்சார்பாகச் செற்படுவதாகவும் அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிகை எடுக்குமாறும் கோரி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இன்று (18) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழி, கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், “இம்மாகாணத்தில், ஆட்சியாளர்களின் ஒருபக்கச் சார்பான செயற்பாடுகளுக்கு அடிபணிந்து சில அரச நிர்வாகங்கள் செயற்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூகங்களுக்கு மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்பட்டதே வரலாறாகும்” எனக் கூறியுள்ளார்.
“இம் மாகாணத்தில் உயர் பதவிகளுக்காக, அரசியல் ரீதியாக நியமன விதிமுறைக்கு முரணாக நியமனங்கள் செய்வதாலேயே, பக்கச் சார்பான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன” எனவும் அவர் கூறியுள்ளார்.
“இதன்காரணமாக, மீண்டும் மீண்டும் இம்மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாகிக் கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ள அவர், “எதிர்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் மேற்கொள்ளப்படுகின்ற நிர்வாக ரீதியான செயற்பாடுகள், அனைத்து இன மக்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமைதல் வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சி அமைப்பாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, கட்சிகளுக்கான செயற்றிட்டங்களை அமுலாக்குமாறு கோருவதால் மறைமுகமான தாக்கங்கள் உருவாகின்றன என விமர்சித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் செய்யப்படும் போது, சரியான கொள்கையின் அடிப்படையில் நியமனங்கள் செய்யுமாறும் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
59 minute ago