எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 26 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த முத்துக்குமார் செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராசா, மட்டக்களப்பு வர்த்தகர் சங்கம், மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனம் என்பவற்றின் தலைவராகவும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும் உள்ளார்.
சமூக சேவையாளரான இவர், மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .