2025 மே 19, திங்கட்கிழமை

‘கிழக்கு மாகாண பெண் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்’

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரியுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் பெண் வேட்பாளர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய 32 பெண் வேட்பாளர்கள் இணைந்து, உள்ளூராட்சிமன்றப் பெண்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை, மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (21) வெளியிட்டு வைத்தனர்.

விழுது நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் திருமதி இந்துமதி ஹரிகரன் தாமோதரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போதே, பெண் வேட்பாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.  

இதன்போது கருத்துத் தெரிவித்த சில பெண் வேட்பாளர்கள், பெண் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர்கள் பிரசார நடவடிக்கைகளுக்கு சில அசௌகரியங்களும் ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தொலை பேசியூடாக அச்சுறுத்தல்கள் வருவதாகவும் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதற்கு பெண்களுக்கு வேற வேலை இல்லையா எனவும் கேட்கின்றனர் எனத் தெரிவித்தனர்.

சில அரசியல் கட்சிகள், சில பெண் வேட்பாளர்களுக்கு தெரியாத அவர்கள் அறிமுகமில்லாத வட்டாரங்களுக்கு வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் அதனால் அங்கு பிரசாரத் செல்வதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, சில அரசாங்க ஊழியர்களின் அச்சுறுத்தல்களும் தமக்கு அவ்வப்போது ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X