Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 05 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவை உடனடியாகக் கலைத்து விடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்புக்கு கடந்த சனிக்கிழமையன்று விஜயம் செய்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்த வைபவத்தின் போதே, இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் கடமையாற்றும் உறுப்பினர்கள் 15 அல்லது 16 வருடங்களாக தொடர்ச்சியாகக் கடமையாற்றி வருகின்றனர். இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்தே, ஜனாதிபதி மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் மூன்று அல்லது நான்கு வருடங்களே கடமையாற்ற வேண்டும். அதற்கு மேல் அவர்கள் அந்த குழுவில் கடமையாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவானது வேலையற்ற பட்டதாரிகளிடம் கூறியிருப்பது அவர்களுக்குரிய வேலைவயல்ல.
“மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவானது ஒரு பாரிய தவறை புரிந்துள்ளார்கள். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அப்படியான ஒன்றைச் சொல்வதற்கு எந்தவிதத்திலும் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
“இப்படியான பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்துவது கூட தவறான விடயமாகும். இந்த பொதுச் சேவை ஆணைக்குழுவை கலைத்து விடுமாறு நான் ஆளுனருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த ஆணைக்குழுவில் தொடர்நது 16 வருடங்கள் பணியாற்றுகின்றவர்களும் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆணைக்குழுவின் நியமனங்கள் 3 அல்லது 4 வருடங்களில் மாற்றப்படல் வேண்டும்.
நான் அதுபற்றி ஆளுநருக்கு விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கலைக்குமாறு, கிழக்கு மாகாண அரச சேவை தொழிற் சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago