Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொற்று முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில், நேற்று (05) மாலை முதல் அவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுவரும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் நீண்ட விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று தற்போது பல்கலைக்கழகம் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்கியிருக்கும் மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியிலுள்ள பல்கலைக்கழக விடுதில் அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago