Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டு, காணாமலாக்கப்பட்டோரின் 27ஆவது நினைவு நிகழ்வு, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது, அங்கு தஞ்சமடைந்திருந்த158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டனரெனவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பதும் இதுவரைத் தெரியவராத நிலையில் உறவினர்கள் வருடாந்தம் நினைவு நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.
காணாமல்போன உறவினர்களின் நினைவுக் குழுவின் சார்பில் அதன் ஏற்பாட்டாளர்கள், அரியமலர் தலைமையில், பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இ. கோபாலசிங்கம் சிவாச்சாரியார் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
9 hours ago