Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 14 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மண்முனை, தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு முழுவதும் குடிநீர் வழங்குவதற்கு 350 மில்லியன் ரூபாய் பணம் தேவைப்படுவதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக நேற்று(13) வினவிய போதே, இதனைக் தெரிவித்தார்.
இது தொடர்பில், தவிசாளர் மேலும் கூறுகையில்,
மண்முனை தென்மேற்கு பிரதேசசபைப் பிரிவிலுள்ள பல கிராமங்களில், வருடாந்தம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு, இவற்றினை தற்காலிகமாக சீர் செய்யும் வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால், ஆரையம்பதிலிருந்து குடிநீர் பெறப்பட்டு பொது இடங்களில் தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் வழங்கப்பட்டு வருவதுண்டு. இதனால் மாதமொன்றிற்கு 75ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம் செலவுசெய்யபடுகின்றது.
தற்போது, உன்னிச்சைக் குளத்திலிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு நேரடியாக குழாய் மூலமாக ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதி பெற்றுக்கொண்டுள்ளமையினால், மாதாந்தம் 15ஆயிரம் ரூபாய் பணம் சேமிக்கப்படுவதுடன், நேரவிரயங்களும் தடுக்கப்படுகின்றன. இதேவேளை பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
இணைப்புக்கள் அவசியம் வழங்கப்பட வேண்டிய அரசடித்தீவு, படையாண்டவெளி, பண்டாரியாவெளி, கடுக்காமுனை போன்ற கிராமங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக 10இலட்சம் ரூபாய் பணம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் எல்லைப்பகுதியான கச்சக்கொடிசுவாமிமலை வரை முழுவதுமாக குடிநீர் வழங்குவதற்கு 350 மில்லியன் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது. இப் பணத்தினை பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அவ்வாறு பணம் கிடைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பிரதேசசபை எல்லையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றார்.
4 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago
1 hours ago