2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் செறிந்து வாழும் நாவலடி, பாலை நகர், றஹ்மத் நகர் ஆகிய  கிராமங்களுக்குள்  நேற்று (16) இரவு திடீரென புகுந்த யானைகளால், மக்கள் அச்சம் கொண்டுள்ளதோடு, அப்பகுதிகளிலுள்ள சிலர், குடிசை வீடுகளை விட்டு பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த பகுதிகளில் மூன்று யானைகள் உள்நுழைந்து பயிர்களையும், பொருள்களையும் சேதப்படுத்தியதை அவதானித்தவர்கள், உடனடியாக பிரதேச சபைத் தவிசாளருக்குத் தெரியப்படுத்தினர்.

பின்னர், தவிசாளர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளை சம்பவம் நடந்த இடத்துக்கு வரவழைத்து,  பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதோடு, யானைகளை விரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் குறித்த அதிகாரிகளுடன் பிரதேச இளைஞர்களும், பிரதேச மக்களும் இணைந்து குடியிருப்பு பகுதிகளை விட்டு, யானைகள் காணப்படுகின்ற காரமுனை காட்டை நோக்கி, பட்டாசு வைத்து யானைகள் விரட்டி அனுப்பப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X