2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு, தாழங்குடாவிலுள்ள வீடொன்றிலிருந்து ஆறு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமி (வயது 47) எனும் பெண், இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், சடலமாகக் கிடப்பதை கண்ட அவ்வீட்டிலுள்ளவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் தடவியல் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .