Princiya Dixci / 2020 நவம்பர் 19 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் புதூர் குளத்தில் நேற்று (18) இரவு விழுந்து மீனவர் ஒருவர் மரணித்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
உறுகாமம், புதூர் கிராமத்தில் வசிக்கும் அப்துல் காதர் அப்துல் ஸலாம் (வயது 58) எனும் 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வழமைபோன்று இவர் உறுகாமம் புதூர் குளத்தில் இரவு நேர மீன்பிடிக்காக புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து குளத்துக்குச் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் இவர் குளத்தில் விழுந்து மரணித்துக் கிடந்த நிலையில் சக மீனவர்கள் கண்டு, சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இது பற்றி கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் உடற் கூறாய்வின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
9 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2026