Editorial / 2018 மே 17 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் நீண்டகாலமாக குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து, கொள்ளையடித்து வந்த சந்தேகத்தில், காத்தான்குடியையும் கொழும்பையும் சேர்ந்த இருவர், நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளனவெனவும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள ஊறணிப் பகுதியில் அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்துவரும் கடையொன்றின் உரிமையாளரிடம் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைச் சங்கிலி, மோதிரம் உட்பட தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ், பெரும் குற்றப்பிரிவு பெறுப்பதிகாரி எச்.எம். டபிள்யூ. ஜி. இலங்கரத்தின தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் கே.சி.எம். முஸ்தப்பா உட்பட பொலிஸ் குழுவினர், விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, பொலிஸ் துப்புத்துலக்கப் பிரிவு வழங்கிய தகவலையடுத்து, காத்தான்குடி தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரைக் கைது செய்து விசாரணை செய்த போது, கொழும்பு - 12 ஆமர் வீதி, மஜித்மாவத்தையைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரும் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025