Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் (15) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர், புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணமகனொருவர், மணமகளிடம் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே, இந்த குழு மோதல் ஏற்பட்டுள்ளதென, விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்;, புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்று, அவ்வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீதுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையடுத்து அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள,; இளைஞனை காப்பாற்ற முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில், மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலில் ஏழு பேர் காயமடைந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில,; விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்னும் எவரும் இது தொடர்பில் கைது செய்யப்படவில்லையெனவும், காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
3 hours ago