Princiya Dixci / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியைப்பெற்று, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியுமென, நீதிபதி ரீ.சூசைதாஸன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்க கோரிய வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (02) நடைபெற்றது.
இதன்போது, சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago