Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
“மக்களின் துயர் தீர்க்கச் செயற்பட்ட இறை தூதர்களைக் கூட மக்கள் கல்லெறிந்து தூசித்ததை, துன்பப்படுத்தியதையே வரலாறு சொல்கின்றது. அந்த வரலாற்றுப் பக்கங்கள் தான் இங்கும் எழுதப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாட்டை எவ்விதத்திலும் தடுக்க மாட்டாது” என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
எமது உறவுகளின் துயர் துடைக்க எமது தலைமை இன்னும் வைரமான மனப்பலம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இறுதிக் கிரியை மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் நேற்று (27) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா முற்சந்தியில், தபால் நிலையத்தின் அருகே சம்பந்தன், சுமந்திரனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறுதிக் கிரியை செய்ததாகச் செய்தி வெளிவந்துள்ளது.
“இந்நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பல மாதங்களுக்கு முன் சம்பந்தன் ஐயாவின் உருவப்படத்தை தெருவிலே இழுத்துச் சென்று தீயிட்டுக் கொழுத்திய நிகழ்வும் இதே வவுனியாவிலேதான் நடைபெற்றது.
“அதே ஆட்கள்தான் இதையும் செய்திருப்பார்கள் என்று ஊகிப்பதில் தவறில்லை. வேறு ஆட்கள் என்றாலும் மூலம் ஒன்றேதான்.
“உறவுகளைத் தேடும் உறவுகளின், அவலத்தை, ஆற்றாமையை, விரக்தியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படும் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் இவ்வாறு அவமதிக்கப்படுவது, அல்லது, கேள்விக்கு உட்படுத்தப்படுவது சனநாயகத்தையும், துயரத்தை வெளிப்படுத்துதலின் எல்லையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.
“குறித்த இருவரும், அரசியல் வெளிக்காட்டலுக்காக அல்லாமல் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலிலே முக்கியமானவற்றுள் ஒன்றாக அறுதியிட்டு அதற்கான அடைவை நோக்கி நிகழ்வு நிலை எனப்படும் யதார்த்த வழிமுறைகளுடாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.
“எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் காரணமாகத்தான் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, அதன் செயற்பாட்டுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025