2025 மே 22, வியாழக்கிழமை

கைகலப்பில், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவில் இரு மதப் பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக, கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், இன்று (17) காலை வாழைச்சேனை - மருதநகர் மற்றும் பேத்தாழை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. 

ஒரு மதப்பிரிவினர் தங்கள் வழிபாட்டு தளத்தில் வழமைபோல் ஆராதனையில் இருந்தவேளையில், மற்றுமொரு பிரிவினர், அங்கு அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இரு தரப்பினருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரனமாக, படுகாயங்களுக்குள்ளான இரு தரப்பினரையும் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதால், வழிபாட்டு தளங்களின் ஜன்னல் மற்றும் கூரைப் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து,  மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சம்பவ இடம் மற்றும் வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று பாதிக்கபட்டவர்களை பார்வையுற்றதுடன், நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இதேவேளை, வாகரை பிரதேசத்தில், சேமக்காலை காணி தொடர்பாக, இரு பிரிவினருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனால், வாகரை - திருமலை வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. பின்னர்  வாகரை பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .