2025 மே 07, புதன்கிழமை

கைகள், கால்கள் இன்றி பெண்ணின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி  8ஆம் திகதியன்று காணாமல் போன ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பிள்ளையான் வள்ளியம்மா (வயது 83), 16 நாள்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு-வாழைச்சேனை, பள்ளத்துச்சேனைக் காட்டுப் பகுதியில், காட்டு யானையால் தாக்கப்பட்டு, கை கால்கள் இல்லாமல் உருக்குலைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேரில்லாவெளி கிராமத்தில், பெப்ரவரி  8ஆம் திகதி, இடம்பெற்ற மாதர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போது அப்பெண் காணாமல் போயிருந்தார்.

பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த உறவினர்கள், அவரை ​தேடிய போதே, ஞாயிறுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அந்த சடலத்தின் அருகில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே சடலம்  அடையாளம் காணப்பட்டது.

பிரேதப் பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X