ஆர்.ஜெயஸ்ரீராம் / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, சுங்காங்கேணியிலுள்ள தனியார் தென்னந் தோட்டத்திலிருந்து கைக்குண்டொன்றை, இன்று (12) மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்தத் தீ, வீதியின் அருகிலுள்ள மேற்படி தனியார் காணியினுள் பரவியதைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே, மர்மப்பொருளொன்று தென்படுவதைக் கண்டு, வாழைச்சேனை பொலிஸார், கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன் ஆகியோர்களுக்குத் தகவல் வழங்கியமையை அடுத்து, மேற்படி கைக்குண்டு மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .