Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 21 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ. பஸ்மில் இன்று (21) தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் விரல் அடையாள பதிவு இயந்திரங்களின் பாவனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பதிவு புத்தகங்களில் உள்வரவு, வெளிச்செல்கை நேரங்கள் பதிவு செய்யும் நடைமுறைகளே பின்பற்றப்பட்டு வந்தன.
“இந்நிலையில்,கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரங்களின் பாவனையை அறிமுகப்படுத்துமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கடிதம் மூலம் பணித்துள்ளார்.
“இதற்கமைவாக, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டப் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள் ஆகியோரின் உள்வருகை மற்றம் வெளிச் செல்கை நேரங்கள் விரல் அடையாள பதிவு இயந்திரங்கள் மூலம் உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“இது தொடர்பான விவரம் அடங்கிய கடிதம், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பாடசாலைகள் தங்களுக்குத் தேவையான விரல் அடையாள பதிவு இயந்திரங்களை பாடசாலை அபிவிருத்திக் குழு நிதியிலிருந்து கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
“இதற்கமைய, இதன் முதல் கட்டமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேச பாடசாலைகளுக்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago