2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கொரோனா காலத்தில் கல்வியை முன்னெடுப்பது குறித்து ஆராய்வு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற வேளையில், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில்,  மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டு, தங்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன் வைத்தனர். 

அரசாங்கத்தின் சுற்று நிரூபத்தகு்கமைவாக பாடசாலைகளை முன்னெடுத்து நடத்திச் செல்வதில் சில நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் வரவு 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி மூலம் இடம்பெறுகின்ற கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதற்கு பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இத்தொலைக்காட்சி கல்வி நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதும் சிறந்தது என ஆலோசிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X