Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 01 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியை, தனிமைப்படுத்தலில் இருந்த சிறுமியின் தந்தை பார்க்கச் சென்றதால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு சிறுமி இடமாற்றப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடர் காய்ச்சல் காரணமாக, வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தலில் இருந்த சிறுமியின் தந்தை, வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சிறுமியை பார்வையிடச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்த வாழைச்சேனை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago