2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்புக்கு பொறுப்பாளர் நியமனம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் சீ.டி. ரணசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ‪வின் ஆலோசணைக்கு  அமைவாக 25 மாவட்டங்களின் கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதன் அடிப்படையில், மட்டக்களப்புக்குப் பொறுப்பாக  ரணசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மேஜர் ஜெனரல் சீ.டி. ரணசிங்ஹ, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மாவட்டத்தின் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களையும் மக்களின் பாதிப்புக்கள், அது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன் ஏற்பாடுகள் தொடர்பலும் அதிகாரிகள் மட்ட சந்திப்பில் ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X