Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்துக்கு, கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்குடா அல்கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஹாறூன் ஸஹ்வி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர்களின் நலன்கருதி, கொரோனா பாதுகாப்பு அங்கிகளை, இன்று(1) வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாறூக், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.இல்ஹாம், அல்கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.எம்.ஜாபீர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .