Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,நடராஜன் ஹரன்
மட்டக்களப்பு, மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று(03) களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு தொகுதியை உருக்கிய நிலையில் மீட்டுள்ளனர்.
இதேநேரம் இன்று(04) அதிகாலை பெரியகல்லாறில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 15 பவுன் பெறுமதியான தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீட்டுடன் அடகுபிடிக்கும் நிலையம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டிருந்தது.
இதன்போது, சுமார் 38 பவுன் நகைகளும் ஏழரை இலட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர்.
களுவாஞ்சிகுடி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல்குணவர்த்தன மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் ஆகியோர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
இது தொடர்பில், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை மற்றும் செங்கலடி ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளின்போது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மூலம் மட்டக்களப்பில் உள்ள பிரபல நகை விற்பனை நிலையத்தில் விற்கப்பட்ட சுமார் 20 பவுண் நகைகள் உருக்கிய நிலையில் கட்டியாக மீட்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைகளின் பிரதான சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுபொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
7 hours ago
10 May 2025