Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் எனக் கூறி, வீதியால் சென்றவர்களை வழிமறித்து, கையடக்க தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞளை, எதிர்வரும் 28ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு பகுதியிலுள்ள பாலம் ஒன்றுக்கு அருகாமையில் தனியாக பயணித்த 3 வயோதிபர்களை இளைஞனர் வழிமறித்துள்ளார்.
தான் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாகவும் பொறுப்பதிகாரி வயலுக்குள் இருப்பதாகத் தெரிவித்து அவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து சிறிய ரக 3 கையடக்க தொலைபேசிகள், ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 300, 400, 250 ரூபாய் பணம் மற்றும் ரொச்லைற் ஒன்றையும் கொள்ளையிட்டுள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வவுணதீவு, கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று (14) ஆஜர்படுத்தப்பட்டபோது, இளைஞனை எதிர்வரும் 28ஆம் திகதி வரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள், பணம் மற்றும் ரோச்லைற் என்பனவற்றை மேற்படி இளைஞனிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
46 minute ago
2 hours ago