Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவிருந்த மறியல் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதென, தமிழ் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கோட்டை மறியல் போராட்டமாக, இப்போராட்டம், நாளை (04) இடம்பெறவிருந்தது.
செப்டெம்பர் 29ஆம் திகதி, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியினூடாகப் பயணித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் இராமநாதன் அங்கஜன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பயணித்த வாகனத் தொடரணியை வழிமறித்த தமிழ் உணர்வாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மஹிந்த அமரவீர, தான் கொழும்பு சென்று, ஜனாதிபதியைச் சந்தித்து, இவ்விடயம் சார்பாக உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியிருந்தார்.
அதன்பின்னர், நேற்று முன்தினம் (01), தமிழ் உணர்வாளர்களிடம் தொடர்பை ஏற்படுத்திய அமைச்சர், தனக்கு சில நாள்கள் கால அவகாசம் வழங்கும் படியும் கேட்டுக் கொண்டதற்கமைய, இப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago