Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் கோவில்களில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்தல் தொடர்பான விசேட கூட்டம், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (05) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத், எறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே.ஜயந்த, ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்து மத குருமார்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய நாட்களில் விரதங்கள் மற்றும் ஏனைய மத அனுஷ்டானங்கள் விசேடமாக நடைபெறும் காலம் என்பதால் பக்தர்கள் கோவில் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் சந்தர்ப்பங்களில், சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டுமென விளக்கமளிக்கப்பட்டது.
பிரதேச சுகாதாரத் துறையினரால் தெளிவுபடுத்தப்படும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கோவிலில் நாளாந்த மற்றும் விசேட பூசைகள் நடைபெறலாம் எனவும் இதன்போது கோவில்களில் பிரசன்னமாகக்கூடிய குருமார் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்பில் கோவில் நிர்வாகிகளால் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago