Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவிலிருந்து, கடந்த 2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளப் பெற்ற மாணவிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு, காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய அதிபருமான எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இந்தப் பள்ளிவாயல் மஹல்லாவிலிருந்து 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகளுக்கு நினைவுச்சின்னம், சான்றிதழ் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025