2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கௌரவிப்பு…

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 02 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மண்டபத்தில் நேற்று (01) கௌரவிக்கப்பட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரியிலிருந்து 30 மாணவர்களும், மண்டூர் சக்தி வித்தியாலத்திலிருந்து 2 மாணவர்களும் கிண்ணியா அல் அக்ஷா ஆரம்ப பாடசாலையிலிருந்து ஒரு மாணவருமாக 33 மாணவர்கள் இதன்போது பதக்கம் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.மீராசாகிப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன், காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X