2025 மே 09, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் தொழிலாளி மீது தாக்குதல்; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபையின் சுகாதாரத் தொழிலாளியொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்;ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் எம்.ஜே.எம்.பாஹிம் (வயது 28) என்ற சுகாதாரத் தொழிலாளியே காயமடைந்த நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபையால் இன்று திங்கட்கிழமை உக்கும் கழிவுகள் மாத்திரம் அகற்றும் தினமாகும்.
இந்நிலையில், றஹுமானியா வித்தியாலய குறுக்கு வீதியில் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்த வேளையில் மேற்படி இருவரும் உக்கும் கழிவுகளையும் உக்காத கழிவுகளை சேர்த்து வழங்கியுள்ளனர். இக்கழிவுகளை  அகற்ற முடியாதென்று குறித்த சுகாதாரத் தொழிலாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் குறித்த சுகாதாரத் தொழிலாளிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போதே குறித்த சுகாதாரத் தொழிலாளி மீது மேற்படி இருவரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்
அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X