2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசச் செயலகத்தில், சர்வதேச எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வறிய மாணவர்களுக்கு பண உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு, புதன்கிழமை (09) இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சி, வாழ்வின் எழுச்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் வே.வரதராஜன் தலைமையில், பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில், களுவாஞ்சிக்குடிப் பிரதேசச் செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 60 வறியமாணவர்களுக்கு பணம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அருந்ததி சிவரெத்தினம்;,  சிறுவர் உரிமைமேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.எம்.புவிதரன்,  சிறுவர்பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரி.தயாளன், திவிநெகும வங்கி முகாமையாளர் த.தவேந்திரன், சமூக அபிவிருத்தி உதவியாளர் ரி.உதயசுதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X