2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிசுவைக் கிணற்றில் வீசிய தாய் கைது

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்ரி.யுதாஜித், ரீ.எல்.ஜவ்பர்கான்

பிறந்து 6 நாட்களேயான ஆண் சிசுவொன்றைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகச் சந்தேகிக்கப்படும் அச்சிசுவின் தாயை மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (3) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் மேல்மாடி வீதியை அண்டி அமைந்துள்ள வீட்டு வளாகமொன்றில் காணப்பட்ட கிணற்றிலிருந்து இச்சிசுவின் சடலத்தை கடந்த சனிக்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.

மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து அவ்வீட்டில்  வைத்தியர்களான கணவனும் மனைவியும் வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டில் வேலை செய்துவந்த துறைநீலாவணையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரே கடந்த 27ஆம் திகதி இச்சிசுவைப் பிரசவித்துள்ளார் எனப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனக்குப் பிறந்த சிசுவை இப்பெண் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து  தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக தமக்குத் தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று மேற்படி சிசுவின் சடலத்தை மீட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .