2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிசுவை விற்பனை செய்ய முயன்ற தாய் உட்பட மூவர் கைது

George   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பழையநகர் பிரதேசத்தில், பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசுவை, விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வாழைச்சேனை பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிசுவின் தாய், சிசுவை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

20,000 ரூபாய்க்கு குறித்த சிசுவை விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .