Princiya Dixci / 2017 மார்ச் 12 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன், பேரின்பராஜா சபேஷ்
செங்கலடி பிரதேச சபைக்குப்பட்ட சித்தாண்டி இந்து மயானத்துக்க்கான அஞ்சலி மண்டபம் திறப்பு விழா, இன்று (12) நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோபிந்தன் கருணாகரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம், இவ் அஞ்சலி மண்டபம் அமைக்கப்பட்டு, இன்றையதினத்திலிருந்து மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட சித்தாண்டி உட்பட பல கிராமங்களை உள்ளடக்கிய, சித்தாண்டி இந்து மயானத்துக்கு, நல்லடக்கம் செய்வதற்கு மயானத்துக்குக் கொண்டுவரும் உடல்களை வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு, ஓர் அஞ்சலி மண்டபம் இல்லாத குறைபாட்டை நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த நிலையில், இவ் அஞ்சலி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இத் திறப்பு விழாவின்போது, பொது மக்களினால் மயானம் சிரமதானம் செய்யப்பட்டதுடன், சிரமதானத்துக்கு வருகைதந்த பொது மக்களுக்கு, மாங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .