Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் மக்கள் நீர் பெறுவதற்கான வெற்றிகரமான திட்டத்தை யு.எஸ்.எய்ட் ஆரம்பித்;துள்ளது. இம்மாகாண மக்கள் குடிப்பதற்கும் விவசாயத்தை மேற்கொள்வதற்குமான நீரை பெறுவதற்கான வாய்ப்பை அமெரிக்கா வழங்குகின்றது என அமெரிக்கத் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் இந்த வாரம் தனது அபிவிருத்தி பிரிவான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையம் ஊடாக அமெரிக்கா இதற்கான மூன்று திட்டங்களை ஆரம்பித்துள்ளது. சிறிய மற்றும் பாரிய திட்டங்கள் ஊடாக அமெரிக்கா இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது. வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக பாதிப்பை வழமையாக எதிர்கொண்டுள்ள மட்டக்களப்பின் சித்தாண்டியைச் சேர்ந்த 475 குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளன. இதன் மூலம் அந்த குடும்பங்கள் சுத்தமான பாதுகாப்பான குடிநீரை பெறவுள்ளன.
மேலும் 525 குடும்பங்கள் பங்களிப்பு செய்யும் திட்டமும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 1,600 கிணறுகளை சுத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4000 குடும்பங்கள் நீரினால் ஏற்படும் நோயின் பிடியில் சிக்கும் ஆபத்தினை தவிர்ப்பதுடன், சிறந்த சுகாதார நிலையை ஊக்குவிக்கலாம். உள்ளூர் அமைப்பான பாம் மன்றத்துடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது, மேலும், கடந்த காலத்தில் 2700 குடும்பங்களுக்கு குழாய்நீரை வழங்கிய வெற்றிகரமான திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடாக இது அமைந்துள்ளது. மேலும் யுஎஸ்எயிட் அமைப்பு இந்த வாரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கால்வாய் ஒன்றைத் திறந்துவைத்ததுடன், மழைநீர் சேகரிப்பிற்காக அதனை அம்பாறை மாவட்டத்தின் இரு பாடசாலைகளுக்கு வழங்கியது. பெர்கமன கில்ட் என்ற உள்ளுர் அமைப்புடன் இணைந்து அன்னமலை மற்றும் நாவிதன்வெளியில் உள்ள கால்வாய்களும் நீர்த்தேக்கங்களும் 300 விவசாய குடும்பங்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்துவதற்கு உதவிபுரியும். இலங்கையில் உள்ள தனது சகாவான லங்;கா ரெயின் வோட்டர் ஹார்வஸ்டிங் போரத்துடன் இணைந்து யுஎஸ்எயிட் அமைப்பு அம்பாறையின் சம்மாந்துறை மற்றும் தமனவில் உள்ள இரு பாடசாலைகளுக்கு மழை நீரை சேகரிக்கக் கூடிய இரு தாங்கிகளை வழங்கியது. வரட்சிக் காலங்களில் குடிநீர், சுகாதாரம் போன்ற முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்துவதற்காகவே இவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டன. இலங்கையின் அபிவிருத்திக்கும் அதன் மக்களின் வாழ்வாதராத்தை உயர்த்துவதற்கும் 1956 முதல் அமெரிக்கா 2 பில்லியன் டொலர்களிற்கு மேல் முதலீடு செய்துள்ளமை குறித்து அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago