2025 மே 14, புதன்கிழமை

சின்னவத்தை வாசிகசாலையை பாவனைக்கு விடுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வாசிகசாலைக்கான நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்து பாவனைக்கு கையளிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'தெயட்ட கிருள' திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வாசிகசாலை கட்டடத்தை சூழ மரங்களும் செடிகளும் வளர்ந்து பற்றையாக காட்சியளிக்கின்றது.

இந்த வாசிகசாலை இயங்கும் பட்சத்தில் மாணவர்களும் பொதுமக்களும் நன்மை அடையமுடியும். எனவே, இந்த வாசிகசாலைக்கான நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்து மக்களின் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த வாசிகசாலையின் நிலைமை தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.குபேரனிடம் கேட்டபோது, 'தெயட்ட கிருள' திட்டத்தின் கீழ் எமது பிரதேசத்தில் பூர்த்தி செய்யப்படாமலுள்ள திட்டங்கள் தொடர்பில்  சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு நாம் அறிவித்துள்ளோம். இதில் சின்னவத்தை வாசிகசாலையும் அடங்குகின்றது. எனவே, இந்த வாசிகசாலைக்கும் நிதியொதுக்கீடு செய்யப்படுமென்று எதிர்பார்க்கிறோம். இதற்கான நிதி கிடைத்ததும் வாசிகசாலை நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படும்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X