2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சான்றிதழ் பட்டையக்கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்   

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பட்டையக்கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை (24) மட்டக்களப்பு - நாவற்குடா இந்;து காலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்;து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் என்.புவனேந்திரன் இதன்போது வளவாளராகக் கலந்து கொண்டு,  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு விளக்கங்களை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் நூறுக்கு மேற்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து இக்கருத்தரங்கு, நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X