Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கும் இடையிலான முரண்பாடுகளினால் பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(25) காலை நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாளேந்திரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக மாவட்ட செயலகத்துக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி மேற்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் போரதீவுப்பற்றி மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் மற்றும் திவிநெகு உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேற்றம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன் குறிப்பாக போரதீவுப்பற்றில் எதிர்நோக்கப்படும் யானைகளின் தாக்குதல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை தடுப்பதற்கான உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago