Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்,வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேச சம்மேளனம் அமைக்கும் வைபவமும் அச்சம்மேளனத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் முதியோர் சுகாதார மேம்பாடுகள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.
இதன்போது,ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராம மட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட சிரேஸ்ட பிரஜைகளின் அமைப்புகளிலிருந்து சுமார் 50 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தெரிவுசெய்யப்படவுள்ள சிரேஸ்ட பிரஜைகளின் சம்மேளனத்தால் பிரதேச மட்ட அரச மற்றும் அரசு சாரா அலுவலங்களோடு பேணப்பட வேண்டிய தொடர்புகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை,சிரேஸ்ட பிரஜைகளின் சம்மேளனத்தால் பின்பற்றப்படவேண்டிய அதன் நிதிசார் முகாமைத்துவம் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன் விளக்கமளித்தார். கணக்குகளைப் பதிவுசெய்யும் முறைகள்,வரவு-செலவுகளைப் பேணும் முறைகள், நிதி சார்ந்த பதிவுகளையும் கையிருப்புக்களையும் பேணும் முறைகள் மற்றும் பதிவுகளைச் சரிபார்க்கும் முறைகள் என்பன தொடர்பாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து சிரேஸ்ட பிரஜைகள் தமது ஆரோக்கியம் தொடர்பில் கைக்கொள்ளவேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள், எளிதான உடற்பயிற்சிகள், ஒழுங்குமுறையான வாழ்க்கை முறைகள் என்பன தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர் தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து, ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட மூத்த பிரஜைகளுக்கு 5,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் வைபவமும் தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிராம மட்ட சிரேஸ்ட பிரஜைகள் அமைப்புக்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராம மட்டங்களில் பதிவு செய்யப்பட்ட சிரேஸ்ட பிரஜைகளின் அமைப்புக்களின் உறுப்பினர்களிலிருந்து நிருவாக குழு தெரிவுசெய்யப்பட்டது.



5 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago